Thursday, April 18, 2013

அமெரிக் உரத் தொழிற்சாலை வெடிவிபத்து 60 மேற்பட்டோர் பலி; 100க்கு மேற்பட்டோர் காயம்

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வாகோ என்ற இடத்தில் உரத் தொழிற்சாலையில் இன்று(18.04.2013) காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதுடன் 60-70க்கு மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்பதுடன் மீட்பு பணியில் 6 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதுமட்டுமல்ல இங்கு நடைபெற்றது வெடி விபத்தா அல்லது வெடிகுண்டு தாக்குதலா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் இந்த வெடிவிபத்தால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக உரத் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றும் தரைமட்டமாகியுள்ளது இதனால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதே போன்று அமெரிக்காவில் கடந்த 16ஆம் தேதி பாஸ்டன் நகரில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலியானதுடன் 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் நிலையில் இன்று நிகழ்ந்த விபத்து, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment