Wednesday, April 24, 2013

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதாந்தம் 5 அலகுகள் மின்சாரம் இலவசம்!

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதாந்தம் 5 அலகுகள் மின்சாரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கேற்ப, இவ்வருடம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களைக்கொண்டுள்ள 5,50,000 குடும்பங்களுக்கு, மாதாந்தப் பாவனை அலகுகளில் 5 அலகுகள் குறைத்து கட்டணம் கணிக்கப்படும்.

சாதாரணமாக எடுத்துநோக்கும்போது, இவ்வாண்டு க.பொ.த (சா.த) பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் தொகை மூன்று இலட்சத்துப் பத்தாயிரத்திற்கு மேற்பட்டதாகும். க.பொ.த. (உ.த) பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் தொகை இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் என அறியவந்துள்ளது.

இந்தச் சலுகை, மாணவர்கள் க.பொ.த (சா.த) மற்றும் (உ.த) கற்கும் காலப்பகுதியில் மட்டுமே கிடைக்கவுள்ளது எனவும் அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராக் காலங்களில் மாணவர்கள் விழித்திருந்து கல்வி கற்கின்றனர். எனவே, அவர்களுக்குரிய மின்சாரக் கட்டணம் அதிகரித்தே செல்லும். எனவேதான், மாணவர்களைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இந்த சலுகையை வழங்க முன்வந்துள்ளது எனவும் அறியவருகின்றது.

(கேஎப்)

No comments:

Post a Comment