46 மனைவியருடன் உல்லாசமாக வாழ்ந்தவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை!
சீன நாட்டில், பெரும் பணக்காரர்களாலும், பிரபலமானவர்களாலும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியார்களை வைத்திருப்பது அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதாகக் கருதப்படும் நிலையில் இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர்களை உடையவரை அந்நாட்டின் லஞ்ச ஒழிப்புத்துறை, தொடர்ந்து கண்காணிப்பதன்மூலம் அவர்களுடன் இணைந்துள்ள ஆண்களின் ஊழல்களை கண்டறிந்து விடுகின்றது.
இவாறு சமீபத்தில், இந்த விவகாரத்தில் சிக்கி தவிப்பது 46 மணைவிகளுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்த ஷாங்க்டாங் மாகாணத்தின் முன்னாள் கவர்னராக இருந்த ஹுவான் செங். இவர் சட்டத்திற்கு முரணாக அரசாங்க நிலங்களை விற்றதாகவும், அரசுத் திட்டங்களுக்கு லஞ்சம் பெற்றதாகவும், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்கு தனியார் சொத்துக்களை பெற்றுத்தந்து அதிக லாபம் சம்பாதித்தாதாகவும் இவர் மீது தற்போது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவர் பெற்ற லஞ்ச வருமானத்தில் மணைவியர்கள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்துள்ளதுடன் அவர்களுக்கென ஒரு பெரிய மாளிகையையே நிர்மாணித்துள்ளார்.
கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறையின் நிர்வாகத்தில் இருந்த இவர், தன்னுடைய பதவிக்கும் மேற்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்வாக்கு மிக்கவர்களுக்கு காரியங்கள் பல செய்து கொடுத்து லஞ்சம் பெற்றதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு நான்ஜிங் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
0 comments :
Post a Comment