மாணவருக்கு வேண்டுமாம் பால்! தேவையாம் 40 கோடி!
கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கா, அமைச்சரவைக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து, பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்குவதற்காக ரூபா 40 கோடி (40,31,85,600) பணத்தொகையை ஒதுக்குமாறு வேண்டியுள்ளார்.
முதல் கட்டமாக 1,143பாடசாலைகளிலுள்ள 2,23,992 மாணவர்களுக்கு ஆளுக்கு ஒரு பாற்குவளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் பாடசாலை சுகாதார மேம்பாட்டு குழுவினரின் ஒத்துழைப்புடனும் மேற்பார்வையுடனும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்காக சுகாதாரப் பிரிவினரின் உதவியும் பெற்றுக் கொள்ளப்படும்.
தெரிவு செய்யப்படுகின்ற பாடசாலைகளிலுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் தினந்தோறும் 150 மில்லி லீற்றர் பால் வழங்கப்படும். இதற்காக அரசாங்கம் மாணவரொருவருக்கு ரூபா 60 ஐச் செலவிட வேண்டியேற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment