Friday, April 19, 2013

4 ஆம் மாடியில் 2 மணிநேரம் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் சீ.ஜ.டியினர் விசாரணை

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் இந்தியாவிலிருந்து வெளியாகும் அச்சு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வி தொடர்பி 4ம் மாடியில் வைத்து சீ.ஜ.டியினர் கடுமையான விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அவர் வளங்கிய அந்த செவ்வியில் நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தும் வகையிலும் கருத்துக்கள் சொல்லப்பட்டதாகவே, சீ.ஜ.டி யினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த விசாரணைக்கு வருமாறு எனக்கு 12ம் திகதி கடிதம் அனுப்பப்பட்டது, எனினும் நான் இன்றைய தினமே விசாரணைக்குச் சென்றிருந்தேன். இதன்போது இந்திய ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பாக அவர்கள் என்னிடமிருந்து வாக்குமூலம் பெற்றனர். ஆனால் அந்த செவ்வியில் நான் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள் ஊடகங்களில் ஏற்கனவே வெளியாகியிருந்த விடயங்கள் மற்றபடி நாட்டின் பாதுகாப்பு தொடர்பாகவும், இராணுவ இரகசியங்கள் தொடர்பாக எதுவும் சொல்ல வில்லை எனக் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com