சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 38 பேர் கைது!
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்தபோது பேருவளை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 38 பேரும் காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
பேருவளை கடற்பரப்பில் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் மஹாபாகே, அம்பாறை, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, பேருவலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம், கல்முனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 35 தமிழர்களும் இரண்டு சிங்களவர்களும் ஒரு முஸ்லிமும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 comments :
இப்படியும் முட்டாள்கள்,
ஏற்கனவே இப்படியான ஆபத்தான பயணங்களில் பல உயிர்கள் கடலுக்குள் சங்கமாகியுள்ளது. அத்துடன் அவுஸ்திரேலியா அரசாங்கம் படகு அகதிகளை ஏற்றுக்கொள்வதையும் நிதந்திரமாக நிறுத்தியதுடன், ஒருவரைக் கூட தன நாட்டுக்குள் விடாமல் திருப்பியனுப்பிக்கொண்டிருக்கிறது. இதை அறிந்தும், கண்டும் திருந்தவில்லை என்றால் ஒன்றும் செய்ய முயாது.
இவற்றுக்கு யார் காரணம்? அவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்
Post a Comment