Monday, April 8, 2013

30 வருடகால பயங்கரவாத அமைப்பை துடைத்தெறிந்த எமது புலனாய்வுத்துறைக்கு முஸ்லிம் அடிப்படைவாகிகள் ஜூஜூபீ! வீரவன்ச

முஸ்லிம் சமூகத்தில் ஒருவகையான அடிப்படைவாதம் தலைதூக்குவது குறித்து தாம் அறிந்து வைத்துள்ளதாகவும் அந்த அடிப்படைவாத அமைப்புக்களை பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறையினர் கவனித்துக் கொள்வர் என்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன், சிங்கள மக்கள் சனத்தொகையில் எதிர்காலத்தில் வீழ்ச்சி அடையலாம் என்ற பொதுவான பயமுள்ளதாகவும் அதற்காக பெஷன் பக்கை தாக்குவதனூடாக சிங்கள பௌத்த சனத்தொகையை பெருக்க முடியாது என்றும் கூறியுள்ள அவர் அவ்வாறு பெருக்க முடியுமாயின் தானும் சேர்ந்து எறிய தயார் என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில் சிங்கள மக்களின் சனத்தொகையை பெருக்க ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முயற்சியான : இராணுவ மற்றும் பொலிஸ் சேவையில் உள்ளவர்கள் 3 பிள்ளைகளை பெரும் பட்சத்தில் அவர்களின் 3 ஆவது பிள்ளைக்கான விஷேட உதவித்தொகை வழங்கப்படுமென்ற திட்டத்தின் மூலம் இலங்கை அடையலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆத்துடன் இராணுவத்திலும் இராணுவத்திலும் பொலிஸிலும் சிங்கள பௌத்தர்களே அதிகம் உள்ளனர் என்ற விடயத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.

சிங்கள பௌத்தர்கள் இன்று பல நிகாயாக்கள் ஊடாக பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒன்றினைக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. மகாநாயக்க தேரர்கள் இது குறித்து செயற்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் ஒரு வகையான அடிப்படைவாதம் உள்ளதை நாம் அறிவோம். எனினும் அதனை பாதுகாப்பு தரப்பு கவனித்துக்கொள்ளும். 30 வருட பயங்கரவாத்துக்கு எதிரான போரை நிறைவு செய்து நாட்டை மீட்ட இராணுவமும் புலனாய்வுப்பிரிவும் எம்மிடம் உள்ளது. எனவே எவ்வகையான அடிப்படைவாதமாக இருப்பினும் அதனை முறையடிக்ககூடிய சக்தி எம்மிடம் உள்ளது என்றும் அவர் மார்தட்டியுள்ளார்.

1 comment:

  1. Unnamthiri alunkathanta intha nattai sathpaduthiringa neellam oru amachar

    ReplyDelete