Saturday, April 27, 2013

கடந்த வருடம் ஓகஸ்ட் முதல் இதுவரை 29 ஆயிரம் பேர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்!

அவுஸ்திரேலிய நாட்டின் சர்வதேச கட்டுப்பாட்டு விதிகளுக்கமைய செல்லுபடியாகும் விசா இல்லாமல் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற மேலும் 25 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு சட்டவிரோதமாக வந்தவர்கள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியாது என அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் ப்ரன்டன் ஓ கோர்ணர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 13 ம் திகதி முதல் இதுவரை அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு ஆயிரத்து 29 பேர் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு குடியேற்றத்திற்கென மக்களை அனுப்புவதற்கு துணைபோகும் முகவர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் கோர்ணர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு பயணிக்கும் மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படப்போவதில்லை எனவும், அவர்கள் தொடர்ச்சியாக நவுரு மற்றும் மானஸ் தீவுகளுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் ப்ரன்டன் ஓ கோர்ணர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment