கடந்த ஆறு ஆண்டுகளில் 25,000 இலங்கையர்களுக்கு கனடாவில் நிரந்தர குடியுரிமை-இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய
யுத்தம் நடைபெற்ற காலத்தில் உயிரிழந்த புலி உறுப்பினர்கள் மற்றும் இயற்கை காரணங்களினால் உயிரிழந்தவர்கள் பற்றிய சகல விபரங்களையும் திரட்டுவதற்கு வெளிநாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய துல்லியமான தகவல்களின் அடிப்படையிலேயே உயிரிழந்தோர் தொடர்பான சரியான தகவல்களை வெளியிட முடியாது உள்ளது காரணம் யுத்தத்தின் போது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட சிலர் தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் முரண்பட்ட தகவல்களையே சர்வதேச ஊடகங்களும் வெளியிட்டு வருவதாக இரணுவப் பேச்சாளர் தெரிவித்ததுடன் கடந்த ஆறு ஆண்டுகளில் 25000 இலங்கையர்களுக்கு கனடாவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்திருந்தார்.
புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்தும் சில தனி நாட்டுக் கோரிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கு சில ஊடகங்கள் உதவி செய்வதுடன் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தினார் இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய.
0 comments :
Post a Comment