24 மணித்தியாலயங்களினுள் வெளியேறு! யாழ் இராணுவக் கட்டளை மையத்திலிருந்து வந்த உத்தரவு!
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர், ‘புலம்பெயர் தேசத்திலிருந்து மக்களுக்கு செய்யப்போகின்றோம்’ என்று வந்திறங்கியவர்கள் பலர். ஆனால், வடகிழக்கில் குறிப்பாக வன்னி மக்களிடம் புலம் பெயர்ந்தவர்களிடமிருந்து எவ்வாறு உதவிகள் கிடைக்கின்றது என்று கேட்டால், அவர்களிடமிருந்து கிடைக்கும் பதில் என்ன தெரியுமா?" எங்களுக்கு புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து புண்ணாங்கட்டி கிடைக்கின்றது" என்பதுதான்.
இனி விடயத்திற்கு வருவோம். வன்னி மக்களின் பாஷையில் சொல்வதானால்,: புலம்பெயர் தேசத்திலிந்து வன்னி மக்களுக்கு புண்ணாங்கட்டி கொடுக்க வந்து இறங்கிய நூற்றுக்கணக்கானோரில் ஜேர்மனியிலிருந்து வந்திறங்கிய இராமச்சந்திரனும் ஒருவர். புலம்பெயர் தேசத்திலிருந்து வந்திறங்கியவர்கள் கொண்டுவந்து இறக்கிய பருப்பு மூட்டைகளில் பல மூட்டைகள் அவியாத பருப்புக்களாக இரணைமடுக்குளத்தினுள் கொட்டப்பட்டது வேறுகதை. ஆனால், இராமச்சந்திரனின் பருப்பு தமிழரிடம் அவியாவிட்டாலும் பெரும்பான்மை மக்களிடம் குறித்த காலம் நன்றாக அவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்பருப்பு அவிந்தமைக்குக் காராணம், அவர் பௌத்த - இந்து ஒன்றியம் என்ற பெயரில் காலத்தை ஓட்டியமைதான்.
ஆனால், ராமச்சந்திரன் தங்களிடம் பருப்பை இலவசமாக அவித்துக்கொண்டு யாழ் மக்களுக்கு தனக்கு நினைத்த விலைகளில் விற்று பணம் தேடுகிறார் என்ற செய்தியும், இதனால் மக்கள் சொல்லொணாத் துயரங்களை சந்திக்கின்றனர் என்ற செய்தியும் சென்றடைய வேண்டிய இடத்திற்கு சென்றுள்ளது. ஒருநாள் அலறியது இராமச்சந்திரனின் தொலைபேசி. ஹலோ என்ற ராமச்சந்திரனுக்கு " "Pack your bag and leave penisula within 24 hours" "பையை கட்டி எடுத்திட்டு 24 மணிநேரங்களினுள் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறவேண்டும்" என்பது தான் அந்த தொலைபேசியில் வந்த செய்தி.
‘பௌத்த - இந்து சங்கம்’ என அலுவலகம் ஒன்றை யாழ் பகுதியில் அமைத்திருந்த இவர், தனது காரியாலயத்தில் மகிந்தருடன் தான் நிற்பது போன்ற பெரியதொரு படத்தை தொங்கவிட்டுக்கொண்டு மக்களிடம் பல்வேறு காரணங்களுக்காக பணம் அறவிட்டுள்ளமை ஊர்ஜிதமாகியதை தொடர்ந்தே மேற்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது. தொழில்வாய்ப்பு பெற்றுத்தருதல், காணி பிரச்சினைகளுக்கு பஞ்சாயத்து பாணியில் பணம், தடுப்பிலுள்ளவர்களை வெளியே கொண்டு வருகின்றேன் எனக்கூறி பல்வேறு வழிகளில் மக்களிடம் பணம் அறவிடப்பட்டுள்ளது.
மரத்தால் விழுந்தவனை ஏறிமிதிக்கும் எருமைமாடுகளின் ஏமாற்றுவித்தை இதுவரை முடிந்துபாடில்லை என ஜேர்மனியிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சகோதரன் தடுப்பிலுள்ளதாகவும் அவரை விடுதலை செய்வதற்கு உதவுமாறும் கேட்ட பெண் ஒருவரை ‘செய்து தரலாம்... வாங்கோ!’ என்று அழைத்து விடுதியொன்றில் அறை போட்டு .............? தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை மக்களும் உணர வேண்டும். எனவே விரட்டியடிக்கப்பட்டிருக்கும் குறித்த நபர் மற்றும் இவ்வாறான மோசடிப் பேர்வழிகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை வேண்டுவதுடன்..
புலம்பெயர் தேசத்திலிருந்து இந்தப் பாணியில் இங்குவந்து மக்களை ஏமாற்றும் பலரதும் மோசடிகளையும் நாம் வெளிச்சத்துக்குக் கொண்டுவரவுள்ளோம் என்பதையும் தெரியத்தருகிறோம்.
1 comments :
Must get out those kind of infomations on media to public. Better with photo.
Post a Comment