ஜப்பானிலிருந்து 224 அம்புலன்ஸ் வண்டிகள் இறக்குமதி.
நவீன வசதிகளுடன் கூடிய அம்புலன்ஸ் வண்டிகளை ஜப் பான் ரொயாட்டா நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடு பூராகவுமுள்ள அரச மருத்துவமனைகளில் நிலவும் அம்புலன்ஸ் வண்டிகளுக்கான தட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நவீன வசதிகள் கொண்ட 224 வண்டிகள் இறக்குமதி செய் யப்படவுள்ளன. இவற்றுக்கான மொத்த இறக்குமதிச் செலவு 2125 மில்லியன் ரூபாவாகும்.
ஜெய்க்கா நிறுவன அனுசரணையுடன் இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த வண்டிகளில் முதற்கட்டமாக 1050 மில்லியன் ரூபா செலவில் 124 வண்டிகள் அடுத்த இரண்டு மாதங்களில் இறக்குமதி செய்யப்படவுள்ளன. இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நவீன வசதிகள் கொண்ட நான்கு அம்புலன்ஸ் வண்டிகள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன. 31.2 மில்லியன் பெறுமதியான இக்காவு வண்டிகள் நவீன வசதிகள் கொண்டவை என்பதோடு மிகவும் நவீனமானவை என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் 12 நோயாளர் காவு வண்டிகள் உள்ள தோடு, மேலும் இரண்டு வண்டிகள் தேவையென்று யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாணர் டாக்டர் எஸ். சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார். இதேவேளை வடமாகாணத்திற்கு இவை தவிர மேலும் ஆறு நோயாளர் காவு வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment