Monday, April 15, 2013

இராணுவத் தேவைக்காக வன்னியில் 20 ஏக்கர் காணி சுவிகரிப்பு! (அறிவித்தல் இணைப்பு)

இராணுவத்தின் 56ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தினை நிறுவுவதற்கென வவுனியாவில் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதாக அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் வவுனியா - மன்னார் மாவட்ட காணி சுவீகரிப்புஉத்தியோகத்தர் ந. திருஞானசம்பந்தரினால் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"1964ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க காணி எடுத்தல் திருத்தச் சட்டத்தின்படி திருத்தப்பட்டவாறான காணி கொள்ளும் சட்டத்தின் 2ஆம் பிரிவின் (1)ஆம் உட் பிரிவின் கீழ் காணி அமைச்சர் உத்திரவிட்டதன் பிரகாரம் பொது தேவைக்கென காணி சுவீகரிக்கப்படுவதாக பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நொச்சிமோட்டை கிராமசேவகர் பிரிவில் பேயாடி குழாங்குளம் கிராமத்தில் பேயாடி குளம் என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் 20 ஏக்கர் காணி 56ஆவது படைப்பிரிவின் தலைமையத்திற்காக சுவீகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தக் காணிகளின் உரிமை கோருவோர் என நடராஜா, கேதீஸ்வரன், ஆர். நாகேஸ்வரன், எம்.அமிர்தநாயகி, சண்முகநாதன், உமாபதி, எஸ்.சிறிஸ்கந்தராசா, என்.சிறிஸ்கந்தராசா ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன".

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com