Tuesday, April 9, 2013

அமெரிக்காவின் எச். 1-பி விசா குலுக்கல் மூலம் வழங்க முடிவு

அமெரிக்காவின் எச். 1 - பி விசாக்களை குலுக்கள் மூலம் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் சென்று பணியாற்ற வேண்டுமானால் அதற்கு எச். 1 - பி விசா வேண்டும். இந்த விசா 3 ஆண்டுகள் அங்கு பணியாற்ற வழங்கப்படும். இது 6 ஆண்டுகள் வரை நீட்டிக்கத்தக்கதாகும். அமெரிக்காவுக்கு சென்று வேலை செய்ய விரும்புவோரின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒரு நிதி ஆண்டில் 65 ஆயிரம் பேருக்குத்தான் இந்த விசாவை வழங்க அமெரிக்க சட்டம் வழிவகை செய்துள்ளது. அந்த வகையில் வருகிற அக்டோபர் மாதம் 1 ம் தேதி தொடங்குகிற 2014 ம் நிதி ஆண்டுக்கும் 65 ஆயிரம் விசாக்கள்தான் வழங்கப்படும்.

இது தவிர்த்து அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படித்து முதுநிலை பட்டம் பெற்ற பிற நாட்டவருக்கு மேலும் 20 ஆயிரம் விசாக்கள் அளிக்கப்படும். இந்த விசாக்களுக்கான விண்ணப்பங்களை அமெரிக்கா பெற்றுக் கொள்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் எச். 1 - பி விசா கேட்டு விண்ணப்பம் செய்வார்கள் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் சேவைகள் துறை எதிர்பார்க்கிறது. ஆனால் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 95 ஆயிரம் பேர் மட்டுமே எச். 1 - பி விசா கேட்டு விண்ணப்பிக்க முடியும். இந்த ஆண்டு உசச வரம்பினை விட அதிகளவில் எச். 1 - பி விசா கேட்டு விண்ணப்பங்கள் வரும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

அப்படி மிக அதிகளவிலான விசா விண்ணப்பங்கள் வருகிற போது விண்ணப்பங்களை தேர்வு செய்வதற்கு ஆன்லைன் குலுக்கல் முறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2008 ம் ஆண்டுதான் கடைசியாக விசா விண்ணப்பங்களை தேர்வு செய்வதற்கு அமெரிக்கா லாட்டரி குலுக்கல் முறையை பின்பற்றியது. அந்த ஆண்டில் விண்ணப்பம் வரவேற்ற முதல் நாளிலேயே தேவையான உச்சவரம்பு எண்ணிக்கையில் விசா விண்ணப்பங்கள் வந்து குவிந்து விட்டன. இப்போது மீண்டும் அந்த நிலை வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com