இரண்டாம் உலகப்போரில் வீசிய 100 கிலோ வெடிகுண்டு ஜெர்மனியில் கண்டுபிடிப்பு
ஜெர்மனி தலைநகர் பெர்லின் அருகே, இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. 100 கிலோ எடை கொண்ட இந்த வெடிகுண்டு இரண்டாம் உலகப்போரின் போது கூட்டுப்படையினரால் ஜெர்மனியின் மீது வீசப்பட்டதாகும்.
பெர்லின் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் புதைந்து கிடந்த இந்த வெடிகுண்டை, நிபுணர்கள் இன்று வெளியே தோன்றி எடுத்தனர். இதனால் அப்பகுதியில் ரெயில், சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
சுமார் 60 வருடங்களுக்கு முன்பு, ஹிட்லர் தலைமையிலான படைக்கு எதிராக கூட்டுப்படையினர் இரண்டாம் உலகப்போரின் போது பெர்லின் நகரத்தில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது வீசப்பட்ட குண்டுகளில் இன்னும் சுமார் 3000 குண்டுகள் பெர்லின் நகரத்திற்குள் புதைந்து கிடக்கின்றன என்று கூறப்படுகிறது.
கட்டிடப்பணிகள் மேற்கொள்ளும்போது இந்த வெடிக்கப்படாத வெடிகுண்டுகள் ஒவ்வொன்றாக சிக்குவதாக கூறப்படுகிறது. முன்பு பிரிட்டிஷ் படையினரால் கோட்டீன்சென் நகரில் வீசப்பட்ட 500 கிலோ எடைகொண்ட வெடிகுண்டு ஒன்றை கடந்த 2010-ம் ஆண்டு செயலிழக்க செய்தபோது வெடித்ததில், நிபுணர்கள் மூன்று பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment