வவுனியாவில் உயர் கல்வி வாய்ப்பு - வவுனியா IDM மாணவர்கள் பெருமிதம்......
இன்று மாணவர்கள் அரச கல்வியை நிறைவு செய்த பின்னர் உயர் கல்விக்காக வெளிநாடு செல்வதும் இயலாத பொழுது கொழும்பு, திருகோணமலை என்று சென்று உயர் கல்வி கற்பதும் பெருகி வருகின்ற விடயமாகும். ஆனால் வவுனியாவை பொறுத்த வரையில் உயர் கல்வியை உள்ளூரில் கற்பதற்கான வாய்ப்பை முதன் முறையாக IDM Nation Campus ஏற்படுத்தியிருக்கின்றது.
BIT, LLB, BM, ICT Diploma, IHD ஆகிய கற்கை நெறிகளை இலங்கை பல்கலைக்கழகங்களுடனும், லண்டன் பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி இறுதியாண்டு பட்டப்படிப்புகளை லண்டன் பல்கலைக்கழகங்களில் நேரடியாகக் கற்கும் வாய்ப்பையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.
இனி வவுனியா மாணவர்கள் உயர் கல்வியைத் தேடி வேறு மாவட்டங்களுக்கு சென்று பணத்தை இறைக்க தேவையில்லை என 2012ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் BMICH மண்டபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்குச் சென்று வந்த மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் சிறுவர்களுக்கான Kids Program ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது சிறார்களிடையே பெரு வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறு இருப்பினும் மாணவர்கள் தம் உயர் கல்வியை சிறப்புற தொடர்ந்து தாய்நாட்டிற்கு தம்மாலான பங்களிப்பை நல்க வேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது.
--- சித்தன் ---
0 comments :
Post a Comment