எனக்குத் தேவையாயிருந்தால் பண்டாரநாயக்கா குடும்பத்தில் திருமணம் செய்திருக்க முடியும்.. - மர்வின்
சந்திரிக்கா அம்மையார் தன் மகனுக்கு எருமை மாட்டுப் பிள்ளை என்று குறிப்பிட்டுள்ளதாகவும், ‘நான் பெற்றது எருமையாக மாடாக இருந்தால், நான் நல்லதொரு காளைமாடு’ என்று சந்திரிக்கா அம்மையாருக்கு சொல்கிறேன்’ என்று மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
நேற்றுக் காலை (01) அமைச்சில்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம், விஜய குமாரத்துங்கவின் நினைவு தினம் கண்டி புஷ்பதான மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. அங்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரத்துங்க உரையாற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்புக் கூட்டப்பட்டுள்ளது.
மனிதர்களைக் கட்டிப் போடும் மனிதன் என்று சந்திரிக்கா தற்போது கூறுவதாகவும், தனக்குத் தேவையிருந்தால் அன்று பண்டாரநாயக்கா குடும்பத்தில் திருமணம் ஒன்று செய்திருக்கலாம் என்றும் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அதற்குக் காரணம் கலை, மாலை, இரவு எவ்வேளையும் தான் சந்திரிக்காவின் வீட்டிலேயே நின்றிருந்தமையாகும் என்றும் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.
எனது வாய் மிக மோசமானது என்பது எனக்குத் தெரியும். என்றாலும் காட்டிக் கொடுக்கும் வேலைக்குத் தான் தயாரில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் மர்வின்,
எதுஎவ்வாறாயினும், தேவையற்ற விடயங்களைக் கதைத்து எனது வாயைக் கிளப்பிக் கொள்ள வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரிடம் தான் கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் உள்ளவர்கள் மடையர்கள், கள்வர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி முழங்குகின்றார். அவர்களின் பெயர்களை முன்மொழிந்த்தே அவர்தானே! அவருக்கு அது ஞாபகமில்லையா? என்றும் வினா எழுப்பியுள்ளார் மர்வின்.
இன்று பாராளுமன்றில் உள்ளவர்களை கள்ளர்கள் மடையர்கள் என்று குறிப்பிடக் காரணம் அன்று, அம்மையார் அவர்களின் வீடுகளுக்குச் சென்று உண்டு பருகி வந்தமையினாலாகும். இவ்வாறு அவர் நாக்குமீறிக் கதைப்பதற்குக் காரணம் சந்திரிக்கா ‘டவுன்ஹோலி’ல் புலிகளின் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி தலை நாசமாகியுள்ளமையே என்றும் அமைச்சர் மர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
1 comments :
அங்கொடயில் நீதான் பிரதமர்
Post a Comment