வைத்தியர்களுக்கு இரண்டாவது அரச மொழி நிபுணத்துவம் கட்டயமாக்கப்படுகின்றது.
2007ம் ஆண்டு முதல் நியமனம் பெறும் மருத்துவர்களுக்கு, இரண்டாவது அரச மொழி நிபுணத்துவம் கட்டாயமாக்கப்படுமெனவும் இதற்கான விசேட பயிற்சி பாடநெறி, அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படுமெனவும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
2007ம் ஆண்டு 7 ஆம் இலக்க அரச நிர்வாக சுற்றுநிருபத்தின் படி, இது முன்னெடுக்கப்படுமென, அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில் சிங்கள மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள், தமிழ் மொழியையும், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட சகலரும், சிங்கள மொழி தொடர்பான அறிவையும் பெற்றிருப்பது, கட்டாயமாகும்.
இது தொடர்பான விசேட சந்திப்பொன்று, அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயகார ஆகியோர் தலைமையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. மருத்துவ சேவையில் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் அங்கு தெரிவித்தார்.
நோயாளர்களை கவனிக்கும்போது, மருத்துவர்களுக்கும், நோயாளர்களுக்கும் இடையே சிறந்த தொடர்பை ஏற்படுத்தவதற்கும், அவர்களின் மொழி அறிவை வலுப்படுத்துவதற்கும் தேவையான பாடநெறிகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும். சுகாதார அமைச்சும், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியன இணைந்து, இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
0 comments :
Post a Comment