அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்க வடகொரியா ஆயுத்தம்: கொரிய தீபகற்பத்தில் போர்மேகம்
வடகொரியா தனது அணு ராக்கெட்டினை நிலைநிறுத்தி அமெரிக்காவினை தாக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர்மேகம் சூழ்ந்துள்ளது. வடகொரியா-தென்கொரியா இடையே கடந்த 1950-53-ம் ஆண்டு போர் ஏற்பட்டது. அமெரிக்க தலையிட்டால் போர் முடிவுக்கு வந்தது. தற்போது மீண்டும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
வடகொரியா தலைவராக கிம்ஜோங் உன் உள்ளார். ஐ.நா. கண்டனம் தெரிவித்தும், சர்வதேச விதிமுறைகளை மீறி வடகொரியா கடந்த ஆண்டு டிசம்பரில் ராக்கெட்டை ஏவி சோதனை நடத்தியது. மேலும் கடந்த சில மாதங்களுக்குமுன அணு சோதனையையும் நடத்தியது.
வடகொரியா தலைவர் உத்தரவுக்காக காத்திருப்பு
இந்நிலையில் வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவினை அலற வைத்துள்ளது. வடகொரியாவினை அடக்கி வைக்க , தென்கொரியாவிற்கு ஆதரவாக அமெரிக்க செயல்பட்டு தனது ராணுவ தளத்தினை நிறுவியுள்ளது. தென்கொரியாவில் மெயின்லாண்ட பகுதியில் உள்ள ராணுவ தளம் மீதுவடகொரியா அணு குண்டுகளை தாங்கி ராக்கெட் வீசி தாக்குதல் நடத்த இரு ராக்கெட்டுகளை தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு பதிலடி கொடுக்க அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வடகொரியா-தென்கொரியா எல்லையில் போர்மேகம் சூழ்ந்துள்ளது. எந்த நேரமும் வடகொரியா தலைவர் உத்தரவிடலாம் என வடகொரியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வடகொரியா தலைவர் கிம் ஜோங்உன் தனது ராணுவ உயரதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார். போர் துவங்குவதற்கான கையெழுத்திட்டதும் போர் துவங்கிவிடும் எனவும் அந்த செய்திநிறுவனம் கூறியுள்ளது.
1 comments :
Nobody is brave and courage because it is certain there could be another brave and couraged person in any part of the world.
Post a Comment