அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகள் குழுவொன்று நேற்று(30.03.20133) காலை தலைமன்னார் பியர் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள முஸ்ஸிம் மக்களை நேரில் சென்று பார்வையிட்துடன் மீள் குடியேறிய மக்கள் வாழ்ந்து வரும் தற்காலிக வீடுகளையும் பார்வையிட்டதோடு அந்த மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தனர்.
இந்த சந்திப்பின் போது அந்த மக்கள் தமது பிரச்சினைகளான வீடு, குடி நீர், மலசல கூடம் இன்மை, மின்னாரம் இல்லாமை போன்ற பிரச்சினைகள் தொடர்பாக இராஜதந்திரிகள் குழுவிடம் முன்வைத்தனர்.
இந்த இராஜதந்திரிகள் தூதுக்குழுவிற்கு பலஸ்தீனத் தூதுவரும் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் அமைப்பின் தலைவருமான கலாநிதி அன்வர் அல் அகா தலைமையில் பலஸ்தீனம், பாகிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேசியா, பங்காளதேஷ், மற்றும் மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்டோரே கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment