யாழில் சட்டவிரோத விபச்சார விடுதி முற்றுகை யாழ் பல்கலைக்கழக மாணவர் கைது(படங்கள் இணைப்பு)
யாழ். கோவில் வீதியில் சட்விரோதமாக இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று நேற்று(28.03.2013) மாலை யாழ். பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்த முற்றுகை நடவடிக்கையின் போது பெண்கள் மூவரும் ஆண்கள் நால்வரும் என ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச செயலர் திருமதி.சுகுணாவதி தெய்வேந்திரம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவரும் மாணவி ஒருவரும் அடங்குவதாகவும் குறிப்பிட்டதுடன் அவர்களது பல்கலைக்கழக அடையாள அட்டை யாழ்.பிரதேச செயலகத்திளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏனையவர்களில் யாழ்-கொழும்பு தனியார் பஸ் சாரதி ஒருவரும் விபசார தொழிலில் ஈடுபட்டுவந்த பெண்ணும் அடங்குவதுடன் ஏனையவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர் எனவும் கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணையின் பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் சம்பவ இடத்திற்க விஜயத்தினை மேற்கொள்ளவில்லை என யாழ்.பிரதேச செயலர் திருமதி.சுகுணாவதி தெய்வேந்திரம் தெரிவித்தார்.
2 comments :
University students at the ill fame house,what a surprise.The credit may go to the university or to the loving parents.The environment circumstances facilities and the advanced technology televisions,films are the causes for all these nonsense.
It is a big surprise how some of the jaffna society changed themselves in to dirty direction.because it was overoll a well disciplined society sometimes back
Post a Comment