ஜனாதிபதி திறந்த யாழ்.போதனா வைத்தியசாலையில் கொள்ளை!
யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஜனாதிபதி மகிந்தவினால் புதிதாக திறந்து வைக்கப்பட்ட கட்டிடத் தொகுதியில் பெறுமதி மிக்க இலத்திரனியல் சாதனம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் நிறுவப்பட்டு இருந்த கட்டிடத் தொகுதியில் அமைக்கப்டட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த“அவரச அழைப்பு” இலத்திரனியல் சாதனம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை கண்காணிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்ட இலத்திரனியல் சாதனமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது இது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை கண்காணிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment