சிங்கள பௌத்தர்களைக் காப்பாற்றுதற்கு பொது பல சேனாவும் சிங்கள ராவயும் களம் குதிக்கிறது.... !
‘சிங்கள ராவய’ அமைப்பு நாவல பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டதையடுத்து, அது பௌத்த தர்மத்துக்கு எதிரான செயல் எனக் கூறி பொது பல சேனா தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
‘அவர்கள் நாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை, பெளத்த சிலைகளை அகற்றி, வீடுகளையும் நிறுவனங்களையும் சுற்று வளைத்து பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள். எங்களுக்கும் அவர்கள் அடங்குகிறார்கள் இல்லை’ என ‘த இண்டிபெண்டண்ட்’ இணையத்தளத்திற்கு பொது பல சேனா இயக்கத்தின் செயலாளர் நாயகம் கலபொட அத்தே ஞானஸார தேரர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
‘சமூகத்திற்கு கேடுவிளைவிக்கும், சமூகத்தை தீய பாதையில் இட்டுச் செல்லும் செயல்களுக்கு தமது இயக்கம் ஒருபோதும் உடந்தையாக இருக்காது, அதற்கு இடம் கொடுக்கவும் மாட்டோம் எனக்குறிப்பிட்டுள்ள தேரர், சிங்கள ராவய அமைப்பு பொது பல சேனா இயக்கத்தைப் பிரச்சினையில் போடுவதற்கு செயற்படுகின்றதோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது. அவர்களுக்குள் ஒரு திட்டம் கிடையவே கிடையாது. யாரேனும் ஏதேனும் சொல்லிவிட்டால் அங்கு போய் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள். தனது அடியாட்கள் கூறியதற்காக இவ்வாறு செய்யக்கூடாது. இவ்வாறு தேவையற்ற தேடல்களில் ஈடுபட முனைந்தால் எப்படித் தேடிமுடிப்பது? எப்போது தேடி முடிப்பது? என்றும் கூறியிருக்கிறார்.
பொது பல சேனா இயக்கமானது ஒரு திட்டத்துடனேயே செயற்படுகின்றது. பொது பல சேனாவுக்கெனவுக்கென ஒரு பார்வையிருக்கிறது எனவும் தேரர் குறிப்பிட்டிருக்கிறார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment