பொது பல சேனா இயக்கம் நாகத்தை வாலினால் பிடித்துக் கொண்டிருக்கிறது - தம்பர அமில தேரர்
இன்னும் நல்ல நல்ல விளையாட்டுக்கள் அதிகாலையில் தான் இருக்கின்றன என்றும், பொது பல சேனா இயக்கம் ஹலாலை ஹராம் என்றும், ஹராத்தை ஹலால் காண்பிப்பதற்காக முழு மூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்லைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஏகாதிபத்திய விரோத மக்கள் அமைப்பின்இணைச்செயலாளருமான தம்பர அமில தேரர் குறிப்பிடுகிறார்.
அவர்கள் இப்போது நாகப் பாம்பை வாலினாலேயே பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாகப் பாம்பைப் பிடிக்க வேண்டியது தலையினாலேயே என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் இதுபற்றி, பல அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சிகளின் அமைப்பாளர்களும் சிவில் அமைப்புக்களின் ஒருமைப்பாட்டுடன் நேற்று (18) கொழும்பில் நடைபெற்ற தேசிய ஒற்றுமையை முன்னிட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு குறிப்பிட்டார்.
பொது பல சேனா என்பது ஒரு அசுத்தமான போலியான இயக்கம் என்று தெளிவுறுத்திய அமில தேரர் அங்கு மேலும் தெளிவுறுத்தியதாவது, பொது பல சேனா இயக்கத்தினரின் ஆட்டம் இன்னும் சில போயா தினங்கள் வரையே சூடு பிடிக்கும், அதன் பின் ஓய்ந்துவிடும்’ என்றும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment