Monday, March 18, 2013

இன்றும் பௌத்த பிக்குகள் மீது இந்தியாவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வீடியோ இணைப்பு.

இந்தியாவின் சென்னை மத்திய புகையிரத நிலையத்தில் வைத்து இன்றும் இலங்கை இளம் பௌத்தத் துறவியொருவரை எல்ரீரீஈ ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

தில்லியிலிருந்து தமிழ்நாடு கடுகதி புகையிரதத்தில் சென்னை மத்திய புகையிரதத்திற்கு வருகை தந்துள்ளஇளம் பௌத்த துறவியொருவரே இத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

'தமிழனை கொன்றுவிட்டு இங்கு வருகிறீர்களா? சிங்கள நாயே வெளியேறு! தமிழ் நாட்டுக்கு வராதே - உங்க நாட்டுக்குத் திரும்பிப் போய்விடு!' என்று பெருஞ் சத்தத்துடன் ஈழ ஆதரவாளர்கள் பௌத்த துறவியை அதட்டியுள்ளனர்.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பௌத்த துறவி உள்ளிட்ட 20 பேர் தம்பதிவ யாத்திரைக்காக செல்லும் வழியிலேயே இத்தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றார். இச்சம்பவத்தையடுத்து அவர்களில் பத்தொன்பது பேரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கு இந்திய அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான பௌத்த துறவியை பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோர் தலைமறைவாகியுள்ளதாக இந்திய செய்தி ஊடகங்கள் ஊர்ஜிதம் செய்துள்ளன.

இதற்கு சில நாட்களுக்கு முன்னரும் புதுதில்லியில் வைத்து தொல்பொருளியல் கல்வியை மேற்கொள்ளும் பெளத்த துறவியொருவர் இவ்வாறாகத் தாக்கப்பட்டார் என ‘த ஹிந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.



(கேஎப்)

5 comments :

Anonymous ,  March 18, 2013 at 5:09 PM  

இது ஒரு கீழ்த்தரமான செயல். இவற்றுக்கெல்லாம் கேடுகெட்ட தமிழக கோமாளி அரசியல் வாதிகளும் அவர்களின் கூலி வானர கூட்டமுமே காரணம். இலங்கை தமிழர் மீது கரிசனை என்றால்,
தமிழ் நாட்டில் அகதி தஞ்சமடைந்து, பல வருடங்களாக, மனிதாபிமானமற்ற சிறை வாழ்வு வாழும் ஆயிரக்கணக்கான ஈழதமிழருக்கு உருப்படியாக ஏதாவது உதவி செய்திருப்பார்கள்.
ஆனால், இதுவரைக்கும் தமிழ், தமிழர் என்று குறைக்கும் ஒரு நாய் கூட அவர்களை தமிழர்களாக பார்த்ததில்லை.
இப்படியான கேடுகேட்ட கோமாளிகளை விட இலங்கை புத்த பிக்குகள் எவ்வளவோ மேல்.

உண்மையான, நேர்மையான தமிழன்

Arya ,  March 18, 2013 at 9:15 PM  

கூட்டமாக பெண்களை கற்பழிக்கும் இந்த இந்திய காட்டு மிரண்டி கூட்டத்தை யாரும் கணக்கில் எடுக்க மாட்டார்கள், இவர்களுக்கு கூட்டம் சேர்ந்தால் தான் தைரியம் வந்து காட்டு மிராண்டி செயல்களில் ஈடுபடுவர்.

Anonymous ,  March 19, 2013 at 9:20 AM  

What a shame to your country.Rowdism cannot be politics.Thuggery cannot be politics.First of all the PETTY baseless chronic politicians and their hirelinks must think,that they cannot bring any changes in our country.Thuggery rowdism raping may be you have in your state but we haven`t in our country.We do respect every saints belongs to Hindu,Catholic Buddhist or muslims because we have a very good tradition in our country.

Anonymous ,  March 19, 2013 at 2:03 PM  

பகுத்தறிவு இல்லாத தமிநாட்டு கோமாளி அரசியல் வாதிகளுக்கும், அவங்களின் எடுபிடி கூலிக்களுக்கும் கடும் தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். தமிழன் என்று சொல்ல அருகதை அற்ற நாய்களுக்கு தமிழ் பண்பாடு தெரியுமா?

Please forward to the TN medias.

Arya ,  March 20, 2013 at 2:38 AM  

Arya Naygan · 18 years old

புத்த பிக்குகளை தாக்குவதற்கு பதிலாக பௌத்த நாடுகளான தாய்லாந்த் , ஜப்பான் , கொரியா , மியன்மார் , கம்போட்சியா , வியட்நாம் , லாவோஸ் போன்ற நாடுகளில் பிழைக்க போன தமிழனை அங்கு தாக்க தொடங்கினால் என்னவாகும் என் தமிழ் நாட்டு காட்டு மிராண்டிகள் உணர வேண்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com