யுத்த காலத்தில் மேற்குலத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்த புலிகள்
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்குலக நாடுகளின் அரசியல் தலைமைகள் மீது புலிகள் பல்வேறு வழிகளில் தாக்கம் செலுத்தியதாகக் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து உரையாற்றும் போது இறுதிக்கட்ட யுத்தத்தை தடுத்து நிறுத்த பல்வேறு தரப்பினர் முயற்சி மேற்கொண்டபோதும் அரசாங்கம் அந்தச் சாவல்களை வெற்றிகரமாக எதிர்நோக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி நேரத்தில் யுத்தத்தை நிறுத்தும் நோக்கில் பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி ஒருவரும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததானர் எனக்குறிப்பிட்டார்.
மேறகுலகத்தில் உள்ள புலிகள் வலுவான பிரச்சாரப் பொறிமுறைமை ஒன்றின் மூலம் சர்வதேச நாடுகளின் மீது தாக்கத்தை செலுத்தியதால் சில நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்யக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும் விதித்திருந்ததால் இலங்கை சீனா, ரஸ்யா போன்ற பலம்பொருந்திய நாடுகளுடன் சிறந்த ராஜதந்திர உறவுகளை பேண வேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் மேலும் தற்போது நாட்டில் நிலவும் நிரந்தர ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment