Sunday, March 17, 2013

பலாலி விமானத்தளத்தை சர்வதேச விமானத்தளமாக தரமுயர்த்த நடவடிக்கை!

பலாலி விமானத் தளத்தை சர்வதேச விமானத் தளமாக தரமுயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதுடன் இந்த விமானத்தள அபிவிருத்தி பணிகளுக்கு இந்தியாவின் உதவியை நாட இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் சிவில் விமான போக்கு அமைச்சு அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கின் அபிவிருத்திப் பணிகள் அரசினால் தற்போது மிக வேகமாக முன்னெடுக்க்ப்பட்டு வருகின்ற நிலையில் பலாலி விமான நிலையம் சர்வதேச விமானத் தளமாக தாரமுயர்த்தப்படும் பட்சத்தில், வடபிராந்திய பொருளாதார அபிவிருத்திக்கு இது இது பாரிய உந்துசக்தியாக அமையும் என அரசு கருதுவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பலாலி விமானத்தளம் இராணுவ விமானப்படைத் தளமாக காணப்படுவதுடன் சிவில் விமான போக்குவரத்துச் செயற்பாடுபளும் நடைபெற்றுவரும் நிலையில் இந்த விமானத் தளத்தை சர்வதேச விமானத் தளமாக தரமுயர்த்தும் நோக்கில் அதனை சிவில் விமான போக்குவரத்து அமைச்சு கையேற்கத் திட்டமிட்டுள்ளது.

வடபகுதியைச் சேர்ந்தவர்களே அதிகமாக இந்தியா சென்று வரும் நிலையில்,இந்த மக்களின் போக்குவரத்து சேவையை இலகுபடுத்துவதற்கு இந்த விமான நிலைய விஷ்தரிப்பு உதவியாக அமையும் என அரசு கருதுவதாகவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அலுவலக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com