இராணுவத்தினரின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் இருதய நோயாளர்களுக்கான மருத்துவ முகாம்!
மன்னார் மாவட்டத்தில் உள்ள இருதய நோயாளர்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்வதற்கான மருத்துவ முகாமொன்று, 54வது படைப்பிரிவின் பிரிகேடியர் மைத்ரி டயஸ் தலைமையிலான இராணுவத்தின் ஏற்பாட்டில் மன்னார், பொது வைத்தியசாலையில் நடைபெற்றது.
வன்னி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவின் பணிப்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இருதய நோய் தொடர்பான எகோ கருவி யாழ்ப்பாணம், வவுனியா, அநுராதபுரம் ஆகிய வைத்திய சாலைகளில் இல்லாத காரணத்தினால் இந்த பகுதி மருத்துவமனைகளிலிருந்து மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள முடியாது கஸ்ரப்பட்ட நோயளர்கள் அழைத்துவரப்டபட்டு கொழும்பு பொது மருத்துவமனையிலிருந்து எடுத்துவரப்பட்டு, எகோ கருவி மூலம் நோயாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த மருத்துவ முகாம் கொழும்பிலிருந்து வருகைதந்த டொக்டர் வஜிர சேனாரட்ன தலைமையிலான 33 மருத்துவர்கள் அடங்கிய குழுவால் இந்த சேவைகள் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment