வாள்வெட்டுக்கு இலக்காகி முஸ்லீம் வர்த்தகர் பலி!
யாழ். ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் நேற்று(27.03.2013) மாலை நடைபெற்ற அசிட் வீச்சு மற்றும் வாள்வெட்டு சம்பவத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
யாழ். முஸ்லிம் கல்லூரி வீதியைச் சேர்ந்தவரும் மானிப்பாயில் மாட்டிறைச்சிக் கடை நடத்தி வருபவருமான அப்துல்காதர் முஹம்மது அலிம் நிஹார் (வயது - 55) என்பவர் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5.00 மணியளவில் இவர் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த வேளை இனந்தெரியாத சிலர் இவர் மீது அசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர் தனது மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு பாதுகாப்புத் தேடி ஓடியவேளை அவரைப் பின்தொடர்ந்த தாக்குதலாளிகள் அவரது கால் மற்றும் கையில் வாளால் வெட்டியுள்ளனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்றிரவு உயிரிழந்தார்.
இந்தச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது உயிரிழந்தவரின் மகனின் மனைவியை மகனின் நண்பர் சில வாரங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார் அது தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 comments :
Very nice culture.
Post a Comment