யாழில் சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வுக்கு குறும்படம்
யாழ். மாவட்டத்தில் அதிகரித்துக் காணப்படும் 16 வயதுக்குக் குறைவான சிறுமியர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப் படுவதனைக் கட்டுப்படுத்தும் முகமாக விழிப்புணர்வூட்டும் குறும்படம் ஒன்று தயாராகி வருவதாக காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இந்தப் படம் விரைவில் கிராமப்புறங்களிலும் துஷ்பிரயோகங்கள் நடைபெறும் பகுதிகளிலும் காண்பிக்கப்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் சிறுமியர்கள் குறிப்பாக 16 வயதுக்குக் குறைவானவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுவது அதிகமாகக் காணப்படுகின்றது.
இதற்கு எமது சமூகத்தின் போதிய விழிப்புணர்வின்மையே காரணம் என்று சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவே இந்தக் குறும்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தப் படம் விரைவில் திரையிடப்பட்டு யாழ். சமூகங்களிடையே இந்த விடயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment