அமெரிக்காவுடன் பேசவேண்டுமாம். இலங்கைக்கு இந்தியா அறிவுரை..
இலங்கை தொடர்பான அமெரிக்கப் பிரேரணை குறித்து இலங்கை அரசு அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பிரேரணை குறித்து இரண்டு தரப்பும் பேசிக்கொள்வதன் ஊடாகவே முறையான இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்காவினால் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் பிரதி ஒன்று இந்தியாவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. இந்திய மத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment