Friday, March 29, 2013

அமெரிக்க உளவுத்துறையின் புதிய இயக்குனராக பெண்ணொருவர் முதல் முறையாக நியமனம்.

அமெரிக்காவின் உளவுப் பிரிவின் இயக்குனராக ஜூலியா பியர்சன் என்ற பெண்ணை அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். இதன்மூலம், ஜூலியா ரகசிய சேவை பிரிவின் முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பிப்ரவரி மாதம் ரகசிய சேவை இயக்குனராக பணியாற்றிய மார்க் சுல்லிவன் ஓய்வு பெற்றதையடுத்து, அப்பதவிக்கு ஜூலியா பியர்சன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மார்க்கின் பணிக்காலத்தில் கொலம்பியா ஊழல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ரகசிய சேவைத்துறை ஆணாதிக்கம் மிகுந்த துறை. அதில் முதல் முறையாக ஒரு பெண் இயக்குநராக வருவதன் மூலம், பெண்கள் மற்றும் சிறுபான்மையைனருக்கு உயர் பதவியில் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற அவப்பெயரிலிருந்து ஒபாமா விடுபட்டுள்ளார்.

1983 ல் சிறப்பு ரகசிய ஏஜண்ட்டாக தனது பயணத்தைத் தொடங்கிய, புளோரிடாவை சேர்ந்த ஜூலியா, தற்போது ரகசியசேவைப்பிரிவின் ஊழியர்களுக்கு தலைவராக பதவி வகித்து வருகிறார். இது குறித்து ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜூலியா இப்பதவிக்கு மிகவும் தகுதியான நபர். இவர் நமது நிதிநிலைமையையும் சேர்த்து பாதுகாப்பார் என்று நம்புகிறேன். மேலும், நமது தலைவர்கள், என் குடும்பம் உட்பட அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாப்பு அரணாக விளக்குவார் ' என ஜூலியாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். 1988 முதல் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. 2005 ஆண்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உதவி துணை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com