சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த இலங்கை வீரர்கள் அவுட்!
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஏப்ரல் 3ஆம் திகதி தொடங்கி மே மாதம் 26ஆம் திகதி வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூர், ஐதராபாத், மொகாலி, ஜெய்ப்பூர், புனே, தர்மசாலா, ராய்ப்பூர், ராஞ்சி ஆகிய 12 நகரங்களில் நடக்கிறது.
சென்னையில் நடை பெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர்கள் கூட்டமைப்பு ஏற்கனவே எச்சரித்து இருப்பதால் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்று ஐ.பி.எல். அமைப்பை மற்ற அணிகளின் உரிமையாளர்கள் வற்புறுத்தியபோதும போட்டிகளை சென்னையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற இயலாது என்று ஐ.பி.எல்.நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
இந்த நிலையில் இந்த பிரச்சினையில் தீர்வு ஏற்படும் வகையில் தங்கள் அணியில் உள்ள 2 இலங்கை வீரர்களை நீக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது. ஐ.பி.எல். தொடர் முழுவதும் விளையாடாமல் இருக்கும் வகையில் இந்த 2 பேரையும் அணியில் இருந்து இந்த சீசனுக்கு நீக்குவது என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ஏனைய 11 இலங்கை வீரர்கள் தொடர்பில் அந்த அணிகளின் உரிமையாளர்கள் என்ன முடிவு செய்து இருக்கிறார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.
0 comments :
Post a Comment