சைபர் தாக்குதல் இலங்கையிலில்லை!
சைபர் பங்கர் என்று அடையாளம் காணப்பட்ட கணினி வைரஸ் ஒன்று உட்பட மேலும் சில வைரஸுகள் இணைந்து உலகின் பல்வேறு நாடுகளின் இணைய வலையமைப்பை முடக்கியுள்ளன.
இதனால் பல்வேறு தரப்பினரும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இருப்பினும் இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று இலங்கை கணனி அவசரநிலை மற்றும் ஒருங்கிணைப்புமையம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகிலுள்ள கணனி வலையமைப்பை முடக்குவதற்காக ஒரு நொடிக்கு 300 கிகா பைட்ஸ் தகவல்களை வலையமைப்புக்குள் செலுத்துவதே கணனி ஊடுருவாளர்களின் நோக்கமாகக் கொண்டிருந்துள்ளது.
உலகின் பிரதான கணனி மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு வலயங்கள் லண்டன், ஜெனிவா மற்றும் வொஷிங்டன் ஆகிய நகரங்களிலேயே அமைந்துள்ளன. கடந்த 2002 ஆம் ஆண்டிலும் இவ்வாறானதொரு கணனி ஊடுருவல் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்ற வைரஸ் தாக்குதல்களில் இதுவே பாரிய தாக்குதலாகும் என்று கணனி வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 comments :
Post a Comment