மூங்கில் குழாயில் நாய் வாலை இட்டாலும் அது நேராகாது! முன்னணி சோசலிஸக் கட்சிக்கு ஹெல உறுமய..
‘சிறுபான்மையினரின் மூச்சுக் காற்றும் நறுமணம் மிக்கதே’ எனக்கூறும் சோசலிஸக் கட்சிக்கு பதிலளிக்கிறது ஜாதிக்க ஹெல உறுமய ஏனையோரின் கலாச்சாரத்தையும் மதித்து நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள முன்னிலை சோசலிஸக் கட்சியினரின் கூற்றுக்கு, ஜாத்திக்க ஹெல உறுமய ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன் பிரச்சாரச் செயலாளர் நிசாந்த வர்ணசிங்கவின் கையொப்பத்துடன் கூடிய அந்த அறிக்கையில்,
முன்னணி சோசலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜாகொட, ஊடகவியலாளர் ஒருவர் வினவிய வினாவுக்கு பதிலளிக்கும்போது ‘ஹலால்’ என்பது இஸ்லாமியர்களின் கலாச்சாரத்துடன் தொடர்புற்ற ஒரு விடயம் என்றும், ஒன்றாக வாழ்வதாயின் ஏனைய மதத்தவர்களின் கலாச்சாரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் உட்கருத்து சிங்களவர்கள் இஸ்லாமியக் கலாச்சாரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதாகும்.
இந்நாட்டு சிங்கள பௌத்தர்களால் அது நடைபெறவில்லை என்பது அவரது துன்பம்மிக்க பேச்சிலிருந்து அறியக்கிடக்கிறது. முன்னணி சோசலிஸக் கட்சி மார்க்ஸிஸ, லெனினிஸ வாதத்தைத் தலைமேல் ஏற்றிக்கொண்டுள்ள கட்சியாகும். ஒரு நாட்டின் சமயம், கலாச்சார செயற்பாடுகள், அவற்றின் அடிப்படைகள் பற்றி அவர்கள் அலட்டிக்கொள்வதில்லை. அதனால் ஒரு நாட்டின் வரலாற்றுத் தொடர்புகள் பற்றி அவர்கள் ஏதும் அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
இந்நாடு சிங்கள - பௌத்த நாடாகும். இந்நாட்டின் நாகரிகம், கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை உருவாக்கியவர்கள் பௌத்தர்கள். அதனது குறிக்கோள் பெளத்த தர்மமே. சிங்கள பௌத்த கலாச்சாரமே. மாக்ஸிஸவாதக் கருத்துக்களினால் தலையைப் பீய்த்துக்கொண்டு, கண்களைக் கட்டிக்கொண்டு குருடர்களாகவுள்ள ஈனியாக்காரர்களுக்கு சிங்கள - பௌத்தர்களின் உதவும்தன்மை, வாழ்வியல், நட்புத்துவம், கருணை, ஆதரவு என்பன புலப்படுவதில்லை. இந்நாட்டுக்குள் தமிழர்களும், முஸ்லிம்களும், மலே - பர்கர் உள்ளிட்ட கிறிஸ்தவர்களும் இன்றுவரை இலங்கை நாட்டுக்குள் வாழக் காரணம் பௌத்தர்களின் விட்டுக்கொடுப்புடன் கூடிய சிறந்த கொள்கையினாலேயே.
போர்த்துக்கீசியத் தாக்குதல்களினால் அல்லற்பட்ட முஸ்லிம்களைக் பாதுகாத்தவர்கள் எங்களது அரசர்கள். அன்று செனரத் அரசனின் காலகட்டத்தில் 4000 ஆக இருந்த முஸ்லிம்கள் 20,00000 ஆக பெருக்கெடுத்திருப்பது சிங்கள - பெளத்தர்களின் உதவியுடன் கூடிய கருணையினாலேயே. இலங்கை நாட்டுக்குள் பாதுகாப்புக் கிடைத்துள்ள அனைத்து இனங்களும் எவ்வேளையும் சிங்கள - பௌத்தர்களுக்கு எதிராகவே செயற்பட்டது. எங்கள் வரலாற்றில் அது நிறையவே பதிவாகியுள்ளது. 1818, 1848, 1915 ஆண்டுகளில் வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளுடன் கைகோர்த்து சிங்களவர்களை அழித்த முறை பற்றி புபுது ஜாகொடவின் தலையினுள்ளே உள்ள மாக்ஸிஸ மூளைக்கு ஒருபோதும் விளங்க மாட்டாது.
ஜம்இய்யத்துல் உலமா 1925 இல் உருவாக்கப்பட்டதற்கான காரணம் டொனமூர் யாப்பில் முன்னணிக்குச் செல்வதற்காகவேயாகும். ஏன் தெரியுமா? முஸ்லிம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டாம் எனச் சொல்வதற்கு. அன்று பௌத்த மதகுருமார் முன்னணியில் சென்று குரல் எழுப்பாதிருந்திருந்தால் இன்று முஸ்லிம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்திருக்காது. ஈனியா மாக்ஸிஸவாத கண்ணாடியைக் கழற்றி வரலாற்றை மீண்டுமொருமுறை வாசித்துப் பார்க்குமாறு புபுது ஜாகொடவுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
ஹலால் பலவந்தத்தைப்பற்றி ஒருவசனமேனும் கதைக்காத புபுது ஜாகொட, அங்குள்ள ஜனநாயக விரோத நுகர்வோர் உரிமை மீறப்படும் உற்பத்திப் பொருட்கள் பற்றியும் வியாபார நிறுவனங்கள் சமயசார்புடையதாக மாற்றப்படுவதற்கு காரணமான உலமாக்களின் தன்மை பற்றியும், ஹலால் சான்றிதழ் பற்றியும் ஒரு கருத்தையேனும் வெளியிடாதவர்.
பௌதீகவாதிகள் மற்றும் லௌகீகவாதிகள் நிறைந்துள்ள சமுதாயத்தில் உண்ணக்கூடிய - பருகக்கூடிய பொருட்களிலிருந்து வியாபார நிறுவனங்களை மதத்துவமயமாக்கல் சரியானா? சிங்கள பௌத்தர்களுக்கு அலங்கார விடயங்களில்கூட முன்னணி சோசலிஸக் கட்சியினர் உள்ளிட்ட இடதுசாரிகளுக்கு நாங்கள் சொல்ல வேண்டியது என்னவென்றால், வியாபார நிறுவனங்களில் உற்பத்தி செய்யும் பொருட்களை ‘பிரித்’ செய்து தர்மச்சக்கரத்தைப் பொறித்தால் சிங்கள பெளத்தர்களுக்கு எதிராக ஆயுதங்களைத் தாங்கி எழுந்திருக்கக்கூடிய முறையைப் பார்த்திருக்க முடியும்.
மாக்ஸிஸவாதி கர்ப்பப்பையில் எழுந்துள்ள பிரச்சினையான இதனை, சிங்கள நாட்டார் கூற்றில் கூறுவதாயின், மூங்கில் குழாயில் நாய் வாலை இட்டாலும் அது நேராகாது’ என்பது. அவ்வாறே, சிறுபான்மையினருக்காக மூச்சுக்காற்றும் நறுமணம் மிக்கது என்று கூறும் கூற்றை பெரியதொரு வாணவெடியாகக் கொள்கின்ற புபுது ஜாகொட சிங்கள கலாச்சாரம் பற்றிய கருத்துக்களை விட்டுவிட்டு அவர்களின் கூற்றுக்கேற்றாற்போல, பேசுவதற்கும் செயற்படுவதற்கும் தங்களை ஆளாக்கிக் கொள்ளுமாறு நாங்கள் மிகவும் பணிவாக வேண்டுகிறோம்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment