திபெத் ஆண்மீகத் தலைவர் தலைமையிலான சமாதான யாத்திரை கிளிநொச்சியை அடைந்தது.
திபெத் நாட்டைச் சேர்ந்த ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய தேரர் ஜிக்மி பேமா வங்சன் தலைமையிலான குழுவொன்று இலங்கையில் உள்ள சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் உருவாக்கும் நோக்குடன் கடந்த 6ஆம்திகதி கதிர்காமத்திலிருந்து வடக்கு யாழ்ப்பாணம் நோக்கி பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்தது.
நேற்று வவுனியாவிற்கு வந்திருந்த இந்த யாத்திரைக் குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு இன்று காலை (29.03.2013) கிளிநொச்சி நகருக்கு வந்தடைந்தனர். இப்பேரணியில் வருகைதந்த இருபத்து நான்கு நாடுகளைச் சேர்ந்த 270 சமாதான விரும்பிகள், மற்றும் பௌத்த துறவிகள் உள்ளடங்கியயோரை பா.உ மு.சந்திரகுமார் தலைமையிலான குழுவினர் மற்றும் கிளிநொச்சி இளைஞர்சேவைகள் மன்றங்களின் பிரதிநிதிகளும் மாவட்ட இளைஞர்களும் மக்களும் கிளிநொச்சியில் வரவேற்றனர்.
0 comments :
Post a Comment