நான்கு இறக்கையுடன் பறவைகள்!
பத்துகோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பறவைகளின் உடலில் நான்கு இறக்கைகள் இருந்ததாக சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பல கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியில் வாழ்ந்த பிரமாண்டமான விலங்குகளான டைனோசர்களின் வழித் தோன்றல்கள்தான், தற்போது இருக்கும் பறவைகள் என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், பண்டைய காலப் பறவைகளின் உடல் படிமங்களை ஆய்வு செய்த, சீனாவின் லின்யி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அப்பறவைகளின் கால்களிலும், இறக்கை இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதுதொடர்பில் ஆய்வை மேற்கொண்ட சீன ஆராய்ச்சியாளர்கள் சீனாவின் ஷண்டாங் மாகாணத்தில் உள்ள, டியான்யூ மியூசியத்தில் உள்ள, வான்கோழியை விட அளவில் சிறிய, 11 வெவ்வேறு வகை பறவைகளின் உடல் படிமங்களில், ஆய்வு நடத்தினோம். இப்பறவைகள், 10 முதல், 15 கோடி ஆண்டுகளுக்கு முன், வாழ்ந்தவை.இப்பறவைகளுக்கு, வழக்கமான இறக்கைகளுடன், கால்களிலும் இறக்கை இருந்தது, ஆய்வில் தெரியவந்துள்ளது. பரிணாம வளர்ச்சியில், தரையில் நடக்க வசதியாக, அவற்றின் கால்களில் இருந்த இறக்கைகள் உதிர்ந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இவ்வாறு, ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
0 comments :
Post a Comment