Tuesday, March 26, 2013

யுத்தத்தில் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் தர எமது அரசு தயார்-மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு, கிழக்கு மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளினால் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று(25.03.2013) திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ரன்பிம' காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வடக்கு, கிழக்கு மக்கள் பயங்கரவாத காலங்களில் தங்களின் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இருப்பிடங்களை விட்டு வெளியேறி இருந்தனர். ஆனால் தற்போது புலிப்பயங்கரவாதத்தினை முற்றாக ஒழித்த அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்கள் தங்களது சொந்தக் கிராமங்களில் சுதந்திரமாக வாழ்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளதுடன் பல அபிவிருத்தி திட்டங்களையும் வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.

மஹிந்த சிந்தனை திட்டத்தின் படி நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தங்களது சொந்த மண்ணில் உரிமையுடன் வாழ்வதே நோக்கம். இதற்கு அமைய வடக்கு, கிழக்கு பகுதி அரசாங்கக் காணிகளில் குடியேறியமக்களுக்கு சட்டப்படியான காணி உறுதிப்பத்திரங்கள் வளங்கப்படுகிறது இன்னும் அரசகாணிகளில் வசிப்பவர்களுக்கும் விவசாயத்திற்கும் என 20 பேர்ச்சஸ் தொடக்கம் 3 ஏக்கர் வரையான காணித் துண்டுகள் வழங்கப்படவுள்ளன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  March 26, 2013 at 4:56 PM  

We want a fair solution to the minority people's problems. All the citizens of this country should have equal rights and freedom. Everyone should be respected and treated equal in practical not verbally.
The best solution for all problems is Provincial Government system like in most of the western countries.
Why the government don't want that?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com