Friday, March 29, 2013

எம்.எல்.ஏ. இளம் பெண்ணுடன் உல்லாச வீடியோ! ‘காவி’ கட்சி என்றார்களே பாவிகள்!

பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதுபோன்ற வீடியோ காட்சிகள் கர்நாடக டி.வி. சேனலில் வெளியாகி, கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், “கர்நாடக மாநில பா.ஜ.க.வில் சண்டையே இல்லை” என்று சொல்லி வாய் மூடாத நிலையில், “ஆமா.. சண்டைதான் இல்லை. சல்லாபம் உண்டு” என்று அங்கு ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. குண்டக்க மண்டக்க கோலத்தில் டி.வி.யில் தோன்றியுள்ளார். கூடவே இலவச இணைப்பாக சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்!

பா.ஜ.க.வினருக்கு கர்நாடக மாநிலத்தில் ஆபாசப் பட சர்ச்சையில் சிக்கிக்கொள்வது ஒன்றும் புதிது அல்ல. கர்நாடக சட்டசபை நடக்கும்போதே அமைச்சர்கள் மூவர் செல்போனில் ஆபாச படக் காட்சிகள் பார்த்த விவகாரம் வெளியாகி நாடு முழுவதும் கொல் என்று சிரித்தது பழைய கதை.

புதிய கதையில் ஹீரோ உடுப்பி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரகுபதி பட். இளம்பெண் ஒருவருடன் இவர் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள், உடுப்பி மாவட்டம் முழுவதும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஏற்கெனவே ஒளிபரப்பானது. நேற்று காலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று, மாநிலம் முழுவதும் இந்த வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியது.

கர்நாடகத்தில் வருகிற மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இருப்பது, மாநில பா.ஜ.க. தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவர் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரகுபதி பட், வழமையாக சிக்கிக் கொள்பவர்கள் கூறும் பதிலான “நான் அவனில்லை” என்றே கூறியிருக்கிறார். “அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தேன். அந்தக் காட்சியில் இருப்பது நான் அல்ல. தேர்தல் நேரத்தில் என் மீது களங்கம் சுமத்தவே, எனது அரசியல் எதிரிகள் சதி செய்துள்ளனர்.

தேர்தலில் என்னை எதிர்த்து வெற்றிபெற முடியாது என்ற எண்ணத்தில் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். என் தனிப்பட்ட விவகாரங்களை எதிர்க் கட்சிகள் தவறாகப் பயன்படுத்திக்கொள்ள முன்வரலாம். இதனால்,பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை” என்று கூறியிருக்கிறார்.

ரகுபதி பட் சர்ச்சையில் சிக்கிவது ஒன்றும் புதிது அல்ல. சில வருடங்களுக்கு முன் அவருடைய மனைவி பத்மப்ரியா தற்கொலை செய்துகொண்டார். அதற்கு காரணம் அவர்தான் என்று விவகாரம் கிளம்பியது.

இந்த விவகாரம் குறித்து மாநில பா.ஜ.க. தலைவர் பிரகலாத் ஜோஷி, “அந்த வீடியோ காட்சியின் உண்மைத் தன்மை குறித்து கட்சி விசாரணை நடத்தும். அந்த ஆபாச வீடியோ பழையது என்ற தகவல் உள்ளது. (அப்படியானால், புதிய வீடியோ வேறு உள்ளதா?)

மேலும் ரகுபதி பட்டும் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்று அறிவித்து உள்ளார். ஆபாச சி.டி. விவகாரத்தின் பின்னணியில் ரகுபதி பட்டின் அரசியல் எதிரிகள் இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இதுபோன்ற விவகாரங்கள் கட்சி மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

அடப் பாவிகளா.. காவி கட்சி என்று சொன்னீர்களே… வீடியோவை பார்த்தால், ‘நித்தியானந்தா காவி’ போல அல்லவா இருக்கிறது!!



நன்றி விறுவிறுப்பு

2 comments :

Anonymous ,  March 29, 2013 at 5:40 PM  

This MLA may be an example for future generation.

Anonymous ,  March 31, 2013 at 12:12 PM  

Shameless humanbeings another shame they do represent the people.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com