மத்தல சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது!(படங்கள் இணைப்பு)
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் இன்று (18.03.2013) காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இதேவேளை, மத்தல விமான நிலைய சேவைக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட 'சிடி ஒப் மாகம் றுஹுணுபுற' விமானமும் இன்று முதன்முறையாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் இவ்விமானத்திலேயே ஜனாதிபதி,மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இச்சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் 220 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 3500 மீற்றர் நீளமும் 75 மீற்றர் அகலமும் கொண்ட விமான ஓடுபாதை விமான பாதை உள்ளடங்கலாக அமைக்கப்பட்டுள்ளது.
உலகிலுள்ள மிகப்பெரிய விமானமான ஏயார் பஸ் 380 ரக விமானத்தைத் தரையிறக்கக் கூடிய வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விமானநிலையத்தில், பயணிகள் சேவை, பொதிகள் சேவை, சரக்குகளைக் கையாளும் சேவை என்பனவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment