இலங்கை இராவணுவத்திற்கு இந்தியப் பயிற்சி தொடரும்.....
இலங்கை உட்பட இந்தியாவை நெருங்கிய நாடுகளிலுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு நீண்ட கால, குறுகிய கால பயிற்சியை வழங்குவதற்கு இந்திய அரசு தயாராகின்றது. இதுபற்றி இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தனி உறுதிப்படுத்தியுள்ளார்.
தொழிநுட்ப ரீதியாகவும், அவ்வாறின்றியும்இந்தப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக இந்திய லோக்சபாவுகு பாதுகாப்பு அமைச்சர் எழுத்துமூலமான கடிதமொன்றை சமர்ப்பித்துள்ள அதேவேளை, லோக்சபாவின் உறுப்பினர்களான பீ. லிங்கம், பிரபோ ஓ பண்டா இதுவிடயமாகக் குறிப்பிடும்போது, இந்தியப் படையினரால் இப்போதும் இலங்கைக்கு இராவணுவப் பயிற்சி வழங்கப்படுகின்றதா? என்பதுபற்றி தங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்தப் பயிற்சிநெறி வழங்கப்படுவதாகவும், பயிற்சிநெறியில் பாதுகாப்புக் கல்வி மற்றும் பயிற்சி உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் இதுபற்றி பாதுகாப்பு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment