இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 39 ஆவது வருடாந்தக் கூட்டத்திற்கு நாட்டின் 43 ஆவது பிரதம நீதியரசரும், சர்ச்சைக்குரிய விதத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவருமான ஷிரானி பண்டாரநாயக்க தலைமை தாங்கியதுடன் தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
இந்த நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே சட்ட மா அதிபர் பாலி பெர்னாண்டோ நிகழ்வு நடந்த இடத்தை விட்டு வெளியேறிச் சென்றதால் நிகழ்வில் உத்தியோகபூர்வ பிரதம அதிதிகள் யாரும் இல்லாத காரணத்தினால் முன்னாள் பிரதம நீதியரசர் பிரதம அதிதியாக செயற்பட்டதுடன் இவருக்கு பான்ட் வாத்தியக் கலைஞர்களும், நடனக் கலைஞர்களும் வரவேற்பு அளித்ததுடன் அனைவரும் எழுந்து நின்று மரியாதையும் செலுத்தினர்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜயதாச ராஜபக்ஷ மரபு ரீதியான சின்னத்தை புதிய தலைவர் உபுல் ஜயசூரியவிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் புதிய தலைவர் உபுல் ஜயசூரியவிற்கு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய, லக்ஸ்மன் கிரியல்ல, மாதுலுவே சோபிததேரர் மற்றும் தம்பர அமில தேரர் உள்ளிட்டோர் பங்கேற்றிருநந்தனர்.
No comments:
Post a Comment