Saturday, March 16, 2013

தமிழகத்தின் தஞ்சையில் இலங்கை பிக்குகள் மீது தாக்குதல்.

தஞ்சை பெரிய கோவிலுக்கு இன்று சென்ற இலங்கை பௌத்த பிக்குகளை கோவில் வளாகத்தில் வைத்து பிரதேச மக்கள் தாக்கியுள்ளனர். திடீரென தஞ்சை பெரிய கோவில் வளாகத்துக்குள் சென்ற இவர்களை பிரதேச மக்கள் சூழ்ந்துகொண்டு தாக்கினர், தப்பித்து ஓடிய பிக்குகள் அருகில் இருந்த அரச அலுவலகம் ஒன்றில் தஞ்சம் புகுந்ததைத் தொடர்ந்து, அவர்கள் பொலிசாரின் பாதுகாப்புடன் விமான நிலையம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.

எனினும் விமான நிலையம் அழைத்துச் செல்லும் வீதி வழியே அவர்களை வழி மறித்த பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் தாக்குதல் மேற்கொண்டதில், அவர்களை அழைத்துச் சென்ற வாகனங்கள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.

இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட பா.ம.க உறுப்பினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் 15 க்கும் அதிகமானோர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான குறித்த பிக்குகள் இலங்கையிலிருந்து சுற்றுலா பயணமாக தாய்லாந்து சென்று அங்கிருந்து தமிழகம் நோக்கி சென்றமை குறிப்பிடத்தக்கது.



4 comments :

Anonymous ,  March 16, 2013 at 7:48 PM  

This clearly indicates that the politics mostly in the hands of thugs but one thing we should know thugs cannot do politics,because they are specilized in thuggery.Thuggery is their life and everything.
About Our Buddhist monks,even in the thrash diamond is always diamond.

Anonymous ,  March 16, 2013 at 8:12 PM  

இது ஒரு கீழ்த்தரமான செயல். இவற்றுக்கெல்லாம் கேடுகெட்ட தமிழக கோமாளி அரசியல் வாதிகளும் அவர்களின் கூலி வானர கூட்டமுமே காரணம். இலங்கை தமிழர் மீது கரிசனை என்றால்,
தமிழ் நாட்டில் அகதி தஞ்சமடைந்து, பல வருடங்களாக, மனிதாபிமானமற்ற சிறை வாழ்வு வாழும் ஆயிரக்கணக்கான ஈழதமிழருக்கு உருப்படியாக ஏதாவது உதவி செய்திருப்பார்கள்.
ஆனால், இதுவரைக்கும் தமிழ், தமிழர் என்று குறைக்கும் ஒரு நாய் கூட அவர்களை தமிழர்களாக பார்த்ததில்லை.
இப்படியான கேடுகேட்ட கோமாளிகளை விட இலங்கை புத்த பிக்குகள் எவ்வளவோ மேல்.

உண்மையான, நேர்மையான தமிழன்

Anonymous ,  March 17, 2013 at 3:01 AM  

Dirty TN politicians destroys the good image of the whole Tamils.
They are the first enemies of the respectable Tamil nation.

ஈய ஈழ தேசியம் ,  March 17, 2013 at 12:49 PM  

தமிழ்நாட்டு காட்டுமிராண்டிகள்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com