யாழின் பல இடங்களில் அமெரிக்காவிற்கு எதிரான சுவரொட்டிகள்!
யாழ். நகரின் பல்வேறு இடங்களில் அமெரிக்காவிற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன் சுவரொட்டிகளின் முடிவில் மக்கள் முன்னணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை எதிர்த்து கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் பல நடைபெற்றுள்ளதுடன் கடந்த இருதினங்களுக்கு முன் கிளி நொச்சியில் வடமாகானத்தில் உள்ள தமிழ் மக்கள் பலர் இணைந்து பெரியளவிலான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
1 comments :
Welldone, we are both Tamils and singalesh are Brothers , why Need to put nose USA and India ?
We will accept our friends , but not enamies in other form , any ways USA Need to be away.
Post a Comment