Wednesday, March 27, 2013

காட்டிக்கொடுக்கும் சம்மந்தனுக்கு எதிராக தெற்கில் கிளம்புகிறது எதிர்ப்பு!

நாட்டின் அரசியல் யாப்பை மீறிச்செயற்படுவது மட்டுமல்லாமல் நாட்டு நலனுக்கு எதிராகவும் செயற்பட்டுவருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது ராவணா சக்தி என்ற சிங்கள அடிப்படைவாத அமைப்பு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

நாட்டுக்கு எதிராக செயற்பட்டு, அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி சர்வதேச சமூகத்துக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தரை பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக ராவணா சக்தி என்ற மேற்படி சிங்கள அமைப்பு தெரிவித்துள்ளதுடன் சம்பந்தனது நடவடிக்கை தொடர்பாக கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பின் செயலாளர் இத்தேகந்தேசத் தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அபிவிருத்தியடைந்து வருவது குறித்து பொறுத்துக் கொள்ள முடியாத இந்தியா, பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி இலங்கையை சீர்குலைக்க எடுக்கும் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக கூறியதுடன் அரசசார்பற்ற அமைப்புகள் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் விதத்தை நாட்டு மக்களுக்கு விளக்குவதற்காக நாடு முழுவதும் இராவண சக்தி அமைப்பை விரிவுப்படுத்த உள்ளதாகவும் தேரர் கூறியுள்ளார்.

3 comments :

Anonymous ,  March 27, 2013 at 4:33 PM  

It is better to leave rather than being a traitor.You behaviour will never bring you any fame.Some people try for fame and fortune.

Anonymous ,  March 27, 2013 at 6:56 PM  

தமிழ் அரசியல், தமிழ், தமிழ் தேசியம், தமிழீழம் என்று தொடங்கி தமிழருக்கு அழிவையும், தோல்வியையும், வெறுப்பையும் பெற்றுத்தந்தது தவிர இதுவரைக்கும் சாதித்தது ஒன்றுமில்லை.
இதற்கு அப்பால், ஈழத் தமிழனை வெறும் கோவணத்துடன் கையேந்த விட்டு விட்டார்கள்.

சுயநல தமிழ் கோமாளி அரசியல் வாதிகளும் திருந்தப்போவதில்லை, அவர்களை தொடரும் மதி இழந்த தமிழ் மந்தை கூட்டமும் திருந்தப்போவதில்லை.

எனவே தொடர்ந்தும் தமிழனுக்கு கஷ்ட காலம் போல்தெரிகிறது.
கோவணமும் பறி போகப் போகிறது.

வன்னியன்

Anonymous ,  March 29, 2013 at 1:30 PM  

We have people like him from the period of Kirthi Sri Rajasingha otherwise whites never had the chance of capturing kandyan Kingdom.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com