முஸ்லிங்களுக்காக அமைச்சரவையை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் ஹக்கீம் கோரிக்கை!
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்து வருவது குறித்து அமைச்சர்களான அதாவுல்லா மற்றும் ரிசாத் பதியூதின் ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடாத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் உடனடியாக அமைச்சரவையை கூட்டி தற்போது நடைபெறும் சம்பவங்களுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பெப்பிலியான சம்பவத்தை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்திய ஹக்கீம் அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் நடைபெறும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 comments :
பத்துமாதங்கள் தன் வயிற்றில் சுமந்து இவ் உலகிற்கு குழந்தை ஒன்றை ஈன்று அளிப்பவள் தாய். அவளது உதிரத்தை பாலாக மாற்றி பருகத் தருகிறாள். தாயானவள் சகல சுமைகளையும் தானே சுமந்து கொள்ளும் உயர் ஸ்தானத்தில் இருப்பவள். இதற்கு சமமான நிலையில் இருப்பது தாய் நாடும் தான் பிறந்த ஊருமாகும்.
ஆனால் நவீன உலகில் எதுவித குளிர்கால யுத்தமுமின்றி முஸ்லிம் இராஜ்யம் பற்றி முஸ்லிம்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு முஸ்லிம்கள் அரசியல், பொருளாதார, சமய, அதிகாரங்களை தம்வசப் படுத்திக் கொண்டு போனால் கூடிய கெதியில்; முஸ்லிம்களின் கையின் கீழ் சிங்களவர்கள் வாழவேண்டிய நிலை ஏற்படும். அப்பொழுது சிங்களவர்களுக்கு வெளியேறுவதற்கு ஒரு நாடோ பின்பற்றுவதற்கு சமயமோ இல்லாது கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படும். அப்படி நடக்காது முளையிலே கிள்ளி எரிய வேண்டிய காலம் சிங்களவர்களுக்கு உதயமாகியுள்ளது.
இலங்கை இன்னும் 20- 30 வருடங்களில் இஸ்லாமிய மயதாவதற்கு முஸல்மான்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
1996இல் மாலைத் தீவில் ஒன்று கூடிய முஸ்லிம் நாடுகளின் பிரதி நிதிகள் 2020 இல் கிழக்கு மாகாணத்தில் நஸரிஸ்தான் என்ற பெயரில் ஒரு முஸ்லிம் நாட்டை உருவாக்கவும் பின்னர் முழு நாட்டையும் முஸ்லிம் நாடாக மாற்றுவதற்கு வரைபடம் (பிலேன்) வரையப்பட்டுள்ளது.(திட்டம் தீட்டப்பட்டுள்ளது)
தற்கால சனத்தொகை விபரத்தை (குடிசன மதிப்பீடு) அரசு இன்னும் வெளியிடாது இருப்பதற்குக் காரணம் முஸ்லிம்களின் சனத் தொகை வளர்ச்சி வீதம் 100 சதவீதமாக இருப்பதாலும், முஸ்லிம் நாடுகள் கொடுக்கும் பெருந்தொகை வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொண்டு அதற்குக் கைமாறாக அதனை மறைப்பதுமாகும். முஸ்லிம் சனத்தொகைப் பெருக்கம் அமைதியானதாயினும் அது மிகக் மிகக் கொடூரமானது.
நாட்டில் முஸ்லிம் சனத்தொகை 50 சதவீதமானதும் அவர்கள் ஷரீஹா சட்டத்தை அமுல் படுத்தி நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவர்கள்
நண்பர் ஆர்யா அவர்களே,
உங்கள் அனைவர் மீதும் இறைவனின்(கர்த்தரின்) சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
சில சிங்கள அமைப்புகளினால் வெளியிடப்படும் கருத்துக்களின் ஒரு பகுதியை நீங்கள் இங்கு பதிந்திருக்கிறீர்கள். நல்லது, இவை யாவுமே ஒரு சில அச்ச உணர்வுகளால் ஏற்பட்ட கருத்துக்கள் மாத்திரமேயாகும். இவை அனைத்தும் உண்மையானவையா? ஏற்றுக் கொள்ளத்தக்கவையா? என்பதை அறிவு பூர்வமாக ஆராய்ந்தால் ஒரு முடிவும் உணர்வு பூர்வமாக ஆராய்ந்தால் வேறு ஒரு முடிவையும் நீங்கள் எடுப்பீர்கள். பெரும்பாலான மக்கள் இது குறித்து ஆராயாமல் உணர்வு பூர்வமாக முடிவுகளை எடுத்திருப்பதனாலேயே நம் தாய் நாடு இன்று கண்டிருக்கின்ற அவல நிலைக்கு காரணமாகும்.
கிழக்கு மாகாணத்திலே தனி முஸ்லிம் நாடு? இது சாத்தியமானதா என்பதை ஆராய்ந்து பாருங்கள். இணைந்த வடகிழக்கிலேயே தனி ஈழம் கேட்டு பல வருடங்கள் போராடி, தனக்கேயான இராணுவ, அரசியல், கல்வி அறிவு, சர்வதேச ஒத்துழைப்பும் பெற்று பெரும் பலம் கொண்டு வாழ்ந்த சகோதர இனத்தவராலேயே அதற்கான தகைமைகள் அனைத்தும் இருந்தும் தனி நாடு உருவாக்க இயலவில்லை. முஸ்லிம்கள் விடயத்தில் அவர்களது பலம், பலவீனங்களை நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள். ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்கள் கொண்ட கொள்கையில் (இஸ்லாத்தில்) உறுதியாக இருக்க முயற்சிக்கிறார்கள் அதை தவிர வேறு எந்த பலங்களும் இல்லை.
மாலைதீவில் நடைபெற்ற மாநாடு? எந்த இடத்தில் நடத்தினார்கள்? யார் யார் கலந்து கொண்டார்கள்? என்ன திட்டம் தீட்டினார்கள்? வரை படம் தயாரித்தார்கள்? உங்களிடம் அவ்வாறு ஏதும் தகவல்கள் இருந்தால் பகிரங்கப்படுத்துங்கள். சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இருந்தால் அவர்களை கைது செய்யுங்கள், விசாரியுங்கள், தண்டனை வழங்குங்கள். தயவு செய்து வீணான அவதூறுகளை பரப்பாதீர்கள்.
முஸ்லிம்களின் சனத்தொகை பெருகுவது முஸ்லிம்களின் குற்றமல்ல. அவரவர் இனங்களை அவரவர் பெருக்கிக்கொள்ளாதது அந்தந்த இனத்தவரின் குற்றமாகும்.
Post a Comment