Sunday, March 31, 2013

தமிழகம் இலங்கைக்கு என்னதான் செய்தது? - தயா மாஸ்ரர்

இலங்கை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே பெரும் பிளவினை ஏற்படுத்துவதற்கு தமிழகம் முயன்றுவருவதாகவும், தமிழக அரசு இலங்கைக்கு எந்தவித உதவிகளும் செய்யவில்லை எனவும், எல்ரீரீஈயின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ரர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘த ஹிந்து’ பத்திரிகை அவரிடம் கண்டசெவ்வியொன்றின் போதே தயா மாஸ்ரர் மேற்படி கருத்தை முன்வைத்துள்ளார்.

அவ்வாறே, இலங்கையின் மேலிடத்தினின்று தனக்கு எந்தவொரு வகையிலும் துன்புறுத்தல்கள் நிகழவில்லை எனவும், மிக உயர்வாக தன்னை ஆதரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறே, தமிழகத்தில் இலங்கை பிக்குமார்கள் தாக்கப்படுவது அவசரமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களுக்கு ஒருபோதும் தமிழ்நாடு உதவ முன்வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தில்லி அரசாங்கம் வடக்கின் அபிவிருத்திக்காகத் தொடர்ந்து பங்களித்து வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசம் பற்றிக் குறிப்பிடுகையில், இலங்கையில் தொடரந்தேர்ச்சியாக நடைபெற்றுவரும் அபிவிருத்தியைத் தடை செய்வதற்கே அமெரிக்கா மற்றும் மேற்கத்தேய நாடுகள் முயன்றுவருகின்றன எனவும் தயா மாஸ்ரர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  March 31, 2013 at 11:32 AM  

These people are the true witness of the past bitter experiences.Hope they are ready to stand in any dock to come out with the truth stroy to the entire world.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com