Sunday, March 31, 2013

இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்காசிய செயலராக அசோக்காந்தா!

இந்திய வெளிவிவகார அமைச்சில், கிழக்காசியாவுக்குப் பொறுப்பான செயலராக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா நியமிக்கப்படுவதற்கா இவரது பெயர் அமைச்சரவைக் குழுவின் அங்கீகாரத்துக்காக அனுப்பப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஸ்வந்த் சின்ஹாவின் மருமகனே அசோக்கே காந்தா என்ற போதிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இவரது இராஜதந்திரத் துறையின் சிறப்பான பணியும், கிழக்காசிய விவகாரத்தில் இவருக்குள்ள பரந்த அனுபவமுமே அவரை வெளிவிவகார அமைச்சின் செயலர் நிலைக்கு உயர்த்த தெரிவு செய்யப்படக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் இந்திய வெளிவிவகார அமைச்சில் கிழக்காசிய பிரிவின் இணைச் செயலராகவும், மலேசியாவுக்கான தூதுவராகவும் அசோக் கே காந்தா முன்னர் பணியாற்றியிருந்த நிலையிலேயே தென்சீனக் கடல் விவகாரத்தில் இந்தியாவின் நலனைப் பாதுகாப்பதற்கு வசதியாகவே அசோக் கே காந்தா இந்தப் பதவியில் நியமிக்கப்படவுள்ளார்.

தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்காசிய விவகாரங்களுக்கான செயலராக உள்ள சஞ்சய் சிங் வரும் ஏப்ரல் மாதத்துடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே அந்தப் பதவிக்கு அசோக் கே காந்தா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதனால் இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்படவுள்ள இந்தியத் தூதுவர் யார் என்பது பற்றிய கேள்வி தற்போது எழுந்துள்ளது.

No comments:

Post a Comment