அமெரிக்காவை குறி வைத்து வடகொரியாவில் நிற்கும் ஏவுகணை
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கவல்ல போராயுதங்களை வடகொரியா சமீபகாலமாக பரிசோதித்து வருகிறது. இந்த பரிசோதனைகள், தென்கொரியாவிற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என கருதிய அமெரிக்கா, வடகொரியாவை கடுமையாக எச்சரித்தது. இதற்கு பதிலடியாக எங்கள் நாட்டின் ஆயுதங்கள் அனைத்துமே அமெரிக்காவை குறி வைத்தே தயாரிக்கப்படுகிறது என வடகொரியா அறிவித்தது.
தற்போது, தென்கொரியா ராணுவத்துடன் அமெரிக்க வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தென் கொரியா மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களின் மீது வடகொரியா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மெயின் லேண்ட், ஹவாய் மற்றும் குவாம் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்குதல் நடத்தும் ராக்கெட்டுகளை தயார் நிலையில் நிலைநிறுத்தும்படி வடகொரியா ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments :
Post a Comment