ஊடகங்களைக் கண்டு அஞ்சும் யாழ் அரச அதிபர்.
இலங்கையின் வேறு எந்த மாகாணத்திலும், மாவட்டங்களிலும் இல்லாத அளவில் வட மாகாணத்தில் மாவட்ட அரச அதிபர்களின் வகிபாகம் காத்திரமாக இருப்பதைக் கூறித்தானாக வேண்டும். கொழும்பு மாநகருக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் கொழும்பு மாவட்டத்தின் அரச அதிபருக்கு என்ன பெயர் என்று கேட்டால், கொழும்பு மாவட்டத்துக்கு அரச அதிபர் என்றறொருவர் இருக்கிறாரா? என்று மக்கள் திருப்பிக் கேட்பார்கள். அந்தளவில் கொழும்பு மாநகரில் அரச அதிபர் முக்கியத்துவம் கொண்டிருப்பதில்லை. ஆனால், வட மாகாணத்தின் நிலைமை அது வன்று. இங்கு எடுத்ததெற்கெல்லாம் அரச அதிபர் என்ற பதவியே உச்சாடனம் செய்யப்படும்.
நிவாரணம் கேட்பது முதல் மகஜர் கையளிப்பு வரை அனைத்துக்கும் அரச அதிபரே சீமான். இதுதவிர, மீள்குடியேற்றம் முதல் அகதி முகாம்களின் கணக்கெடுப்பு, அபிவிருத்திப் பணிகளின் முன்னெடுப்பு, சிறுவர், பெண்கள் உள்ளிட்டோரின் உரிமைப் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் என அனைத்துக்குமான அரசின் புனித தலை வராக அரச அதிபரே இருப்பார். இதன் காரணமாக வட மாகாணத்தில் உள்ளடங்கும் மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரச அதிபர்கள் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படு வோராக இருந்தனர்.
இவையாவற்றுக்கும் மேலாக, வட மாகாணத்துக்கு வருகை தருகின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வடமாகாணத்தின் மாவட்ட அரச அதிபர்களைச் சந்தித்து அந்தந்தப் பிரதேசங்களின் களநிலை மைகளைக் கேட்டறிந்து கொள்வர். இதன் நிமிர்த்தம் ஊடகங்களும் இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தன. போதாக்குறைக்கு வட மாகாணத்தில் எந்த நிகழ்வு நடந்தாலும் அதில் அரச அதிபரை பிரதம விருந்தினராக அழைப்பதில் ஒரு பெரும் மகிழ்வு. அதேநேரம் அந்த நிகழ்வில் அரச அதிபர் ஆற்றுகின்ற உரைக்கு இருக்கக்கூடிய மவுசு சொல்லுந்தரமன்று. இதையயல்லாம் ஒரு கணம் நினைத்துப் பார்க்கும் போது சமகாலத்தில் வட மாகாணத்தில் உள்ள மாவட்ட அரச அதிபர்கள் அடக்கி வாசிப்பது போல அல்லது அஞ்ஞாதவாசத்தை மேற்கொள் வது போன்ற உணர்வு தெரிகின்றது.
இஃது அவ்வளவு நல்லதல்ல, கருத்துக்களை தெரிவிப்பது ஆபத்தாகும் என்று ஒதுங்கிக் கொள்வது நியாமற்றதாகும். கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் யாழ்ப் பாணம் செம்மணி வீதியில் திருத்தப்படும் பாலத்துக்குள் இருவர் வீழ்ந்து பலியாகிப் போயினர். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக் கப்படாததன் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாயினும், இது தொடர்பில் எடுக்கப்பட்ட நட வடிக்கைள் என்னவென்பதை யாழ்.மாவட்ட அரச அதிபர் பொது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதேசமயம் வீதிகளில் வெட்டப்பட்ட கிடங்குகள் தொடர்பிலும் கவனம் செலுத்த கடும் உத்தரவு பிறப்பிப்பது அவசியம். இல்லையேல் அகால மரணங்களும் அவலக் குரல்களும் குறையப் போவதில்லை.
1 comments :
If you want to hold a very responsiblity job act accordingly,because you are representing the government as well as the Jaffna citizens.You need courage and grace to do the job,attending the functions are not very important than attending the essential need of the people.
Post a Comment