கைதிகளின் பாதங்கழுவி முத்தமிட்ட பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ்!(படங்கள் இணைப்பு)
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யபட்ட புனித வியாழன் பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்ட பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் ரோமில் உள்ள கெஸல் டீல் மரம்மோ சிறைச்சாலையில் உள்ள இரண்டு பெண்கள் உட்பட 12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவியுள்ளதுடன் முத்தமிட்டு ஆசிர்வாதம் செய்துள்ளார்.
இச்சிறைகைதிகளில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களும் இரண்டு பெண்கள் உள்ளடங்கியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதுடன் இங்கு கருத்து தெரிவித்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் 'ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்' தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 'நான் இதனை இதயபூர்வமாக செய்கிறேன் இதுவும் எனது கடமை. நான் உங்களுக்கு சேவை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறேன். இதைத்தாக் எனக்கு கடவுள் கற்றுகொடுத்துள்ளார்' என அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் தெரிவித்தார் இதனை பார்த்துக்கொண்டிருந்த பலர் கண்ணீர்விட்டதாக வத்திகான் பேச்சாளர் பெட்ரிகோ லொமபாரட்டி தெரிவித்துள்ளார்.
2 comments :
He is too greats.
What a wonderful heart he has. If the people follow his way, the world will be the paradise.
Post a Comment